TNPSC Thervupettagam

தமிழ்நாடு மற்றும் சிலியில் செவ்வாய் கிரகத்தை ஒத்த புவியியல் தளங்கள்

October 18 , 2026 4 days 83 0
  • கேரளப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர்கள், செவ்வாய் கிரகத்தின் புவியியல் மற்றும் வேதியியல் சூழல்களை ஒத்த நிலப்பரப்புகளை தமிழ்நாட்டிலும் சிலியிலும் கண்டறிந்துள்ளனர்.
  • தமிழ்நாட்டின் நெய்வேலியில் மெலன்டரைட் (Melanterite) கனிமம் கண்டறியப் பட்டு ள்ள அதே வேளையில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி தரிசு நிலங்களிலும், சிலியின் அடகாமா பாலைவனத்திலும் ஜிப்சம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இவை இரண்டும் நீரேற்றப்பட்ட சல்பேட் கனிமங்களாகும், இவை நீர்-பாறை தொடர்புகள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் நீரின் வரலாறு ஆகியவற்றை அறிவியலாளர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன.
  • நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியுடன் (லிக்னைட்) தொடர்புடைய சல்பைடு கனிமமான மார்கசைட்டின் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் மெலன்டரைட் உருவாகிறது; வளிமண்டல வெளிப்பாட்டின் கீழ் 23 நாட்களுக்குள் இது உருவாவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
  • ஜிப்சம் கடந்த கால நீர் செயல்பாட்டை பதிவு செய்கிறது மற்றும் கடந்த கால வாழ்க்கையின் சாத்தியமான சான்றுகளான உயிரி-கையொப்பங்களை (biosignatures) பாதுகாக்கும் தன்மையுடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்