நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய மழைநீர் சேகரிப்பு (RWH) பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை புதுப்பிக்கும், மேலும் வீடுகள், குடியிருப்புகள், நிறுவனங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் புதிய வசதிகளை உருவாக்கும்.
நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்த தண்ணீர் எடுக்கும் இடங்களுக்கு அருகில் தடுப்பணைகள் மற்றும் உறிஞ்சுகுழிகள் கட்டப்படும், அதே சமயம் சேதமடைந்த அமைப்புகள் சரி செய்யப் படும்.
தமிழ்நாடு 2002 ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பை ஒரு மாநிலக் கொள்கையாக அறிமுகப் படுத்தியது, இதன்மூலம் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
1,202 பிர்காக்களில் (வருவாய் உட்பிரிவுகள்), 476 பிர்காக்களில் நிலத்தடி நீர்மட்டம் திருப்திகரமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.