TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாணாக்கர் நலத் திட்டங்கள் 2024–25

November 26 , 2025 9 days 81 0
  • புதுமைப் பெண் திட்டத்தினால் 4.13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் அடைந்தனர் (உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் மாதாந்திர உதவி).
  • தமிழ்ப் புதல்வன் திட்டத்தினால் (VI முதல் X ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 1,000 ரூபாய் மாதாந்திர உதவியுடன்) 3.28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2024–25 ஆம் ஆண்டில் மாநில உதவி பெறும் கிராமப்புறப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
  • இல்லம் தேடிக் கல்வி (வீடுகளில் இருந்தபடி கற்றல் உதவி) மையங்கள் மூலம் I–V வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 7.97 லட்சம் மாணாக்கர்கள் பயனடைந்தனர்.
  • I–V வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 25.08 லட்சம் மாணாக்கர்கள் எண்ணும் எழுத்தும் (அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் கணிதம்) மூலம் பயனடைந்தனர்.
  • அரசுப் பள்ளிகளில் 8,200க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப் பட்டன என்பதோடு மேலும் 2024–25 ஆம் ஆண்டில் மேம்படுத்தல்களுக்காக 745 கோடி ரூபாய் நிதியும் பராமரிப்புக்காக 200 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்