TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாதிரிப் பதிவு மையங்கள்

October 31 , 2026 14 days 125 0
  • எளிதான சொத்து மற்றும் திருமணப் பதிவுச் சேவைகளை வழங்குவதற்காக 7.84 கோடி ரூபாய் செலவில் முதல் கட்டமாக ஐந்து மாதிரிப் பதிவு மையங்களை (MRH) அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பதிவு மாவட்டங்களில் இந்த ஐந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்பைப் பொருட்படுத்தாமல் குடிமக்கள் தங்கள் விருப்பப்படி எந்தவொரு மையத்திலும் சொத்து ஆவணங்கள் மற்றும் திருமணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • தட்கல் பதிவு உட்பட தரமான மற்றும் பிரீமியம்/உயர்தர சேவைகளை இந்த மையங்கள் வழங்கும், மேலும் பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்பின் அடிப்படையில் இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.
  • போட்டியுடன் கூடிய ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வகிக்கப்படும் சேவை வழங்குநர் (MSP) இதன் செயல்பாடுகளை நிர்வகிப்பார், அதே வேளையில் சட்டப்பூர்வ பதிவுப் பணிகள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரிடம் இருக்கும்.
  • இந்த முன்னெடுப்பை மேலும் 20 இடங்களுக்கு விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்