TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில அளவிலான இரைப்பிடிப்பான் பறவைகள் மதிப்பீடு 2025–26

June 8 , 2026 8 days 91 0
  • உலக சுற்றுச்சூழல் தினமான 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று, தமிழ்நாடு தனது முதலாவது விரிவான மாநில அளவிலான இரைப்பிடிப்பான் பறவைகள் மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.
  • ராப்டர்கள்/இரைப்பிடிப்பான் பறவைகள் என்பவை கழுகுகள், வல்லூறுகள், பாறுக்கழுகுகள் மற்றும் ஆந்தைகள் போன்ற இரைப்பிடிக்கும் பறவைகள் ஆகும்.
  • மாநிலம் முழுவதும் 51 இரைப்பிடிப்பான் பறவை இனங்களைச் சேர்ந்த 5,712 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த மதிப்பீட்டை WWF-இந்தியா அமைப்பின் ஆதரவுடன் வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC) மற்றும் தமிழ்நாடு இரைப்பிடிப்பான் பறவைகள் ஆராய்ச்சி அறக்கட்டளை (TNRRF) ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
  • இரைப்பிடிப்பான் பறவைகள் உணவுச் சங்கிலியின் மேல் மட்டங்களில் இருப்பதால், அவை சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டிகளாகக் கருதப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்