தமிழ்நாடு மாநில அளவிலான இரைப்பிடிப்பான் பறவைகள் மதிப்பீடு 2025–26
June 8 , 2026 8 days 90 0
உலக சுற்றுச்சூழல் தினமான 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று, தமிழ்நாடு தனது முதலாவது விரிவான மாநில அளவிலான இரைப்பிடிப்பான் பறவைகள் மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.
ராப்டர்கள்/இரைப்பிடிப்பான் பறவைகள் என்பவை கழுகுகள், வல்லூறுகள், பாறுக்கழுகுகள் மற்றும் ஆந்தைகள் போன்ற இரைப்பிடிக்கும் பறவைகள் ஆகும்.
மாநிலம் முழுவதும் 51 இரைப்பிடிப்பான் பறவை இனங்களைச் சேர்ந்த 5,712 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மதிப்பீட்டை WWF-இந்தியா அமைப்பின் ஆதரவுடன் வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC) மற்றும் தமிழ்நாடு இரைப்பிடிப்பான் பறவைகள் ஆராய்ச்சி அறக்கட்டளை (TNRRF) ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
இரைப்பிடிப்பான் பறவைகள் உணவுச் சங்கிலியின் மேல் மட்டங்களில் இருப்பதால், அவை சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டிகளாகக் கருதப்படுகின்றன.