TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025–26

June 8 , 2026 8 days 215 0
  • தமிழ்நாடு 10.83% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், 2025-26 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் (SOTR) 6.8% என்ற மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2024-25 ஆம் ஆண்டில் ₹1.80 லட்சம் கோடியிலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் சுமார் ₹1.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) முக்கியமாக மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) மற்றும் விற்பனை மற்றும் வர்த்தகத்தின் மீதான வரிகளைக் கொண்டு உள்ளது.
  • SGST வசூல் ₹70,886.77 கோடியிலிருந்து ₹72,008.47 கோடியாக சற்று உயர்ந்து, 1.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதச் சீரமைப்பே இந்த மந்தமான வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப் படுகிறது.
  • 2024-25 ஆம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சிக்கும் வரி வருவாய் வளர்ச்சிக்கும் இடையே தமிழ்நாடு இடைவெளியைப் பதிவு செய்திருந்தது என்ற ஒரு நிலையில் அப்போது பொருளாதாரம் 11.19% வளர்ச்சி அடைந்தது, ஆனால் SOTR 7.74% மட்டுமே வளர்ச்சி கண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்