தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் கொள்கை 2026
November 5 , 2026 2 days 62 0
2.5 ஜிகாவாட் (GW) / 10 ஜிகாவாட்-மணிநேரம் (GWh) சேமிப்புத் திறனை நிறுவுவதை இலக்காகக் கொண்டு, மூன்றாண்டு கால மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) கொள்கை 2026 ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
1 மெகாவாட் மற்றும் அதற்கும் அதிகமான திறன் கொண்ட புதிய சூரியசக்தி அல்லது சூரியசக்தி-கலப்பின புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தங்களது நிறுவப்பட்ட திறனில் குறைந்தபட்சம் 10% BESS திறனை நிறுவியிருக்க வேண்டும்.
1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட தற்போதைய சூரியசக்தி மற்றும் காற்றாலைத் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு, உச்சக்கட்ட மேலாண்மை மற்றும் மின் கட்டமைப்பிற்கான ஆதரவிற்காக BESS-ஐ நிறுவ ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆனது மாநில தலைமை முகமையாக செயல்பட்டு, BESS திட்டங்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பை இயக்கும்.
தமிழ்நாடு 14.5 ஜிகாவாட் சூரியசக்தி மற்றும் 11.6 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம் உட்பட 29.8 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது.