தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக செலவிலான மின்சாரக் கொள்முதலைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிக்கவும் 2.5 ஜிகாவாட் (GW) மின்கலச் சேமிப்புத் திறனை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையானது அதன் மூன்றாண்டு செல்லுபடியாகும் காலத்தில் குறைந்தது 2.5 ஜிகாவாட் (10 GWh) மின்கலச் சேமிப்புத் திறனை இலக்காகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) ஒப்புதலுக்கு உட்பட்டு, மின்பகிர்மான மற்றும் மின் விநியோகக் கட்டணங்களில் 10 ஆண்டு தள்ளுபடியை இது வழங்குகிறது.
1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய சூரியசக்தி மற்றும் சூரியசக்தி-கலப்பினத் திட்டங்கள், நிறுவப்பட்ட சூரியசக்தித் திறனில் குறைந்தபட்சம் 10% க்குச் சமமான வெளியேற்றத் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) நிறுவ வேண்டும்.