TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்னணுக் கூறுகள் உற்பத்தித் திட்டம் 2025

May 2 , 2025 19 days 71 0
  • தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு மின்னணுக் கூறுகள் உற்பத்தித் திட்டத்தினை (ECMS) அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • இம்மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் சுமார 60000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் இலக்காகும்.
  • நாட்டிலேயே முதன்மையான தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டம் ஆனது, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உற்பத்தி அலகுகளை நிறுவும் நிறுவனங்களுக்கு பொருத்தமான மானியங்களை வழங்கும்.
  • இம்மாநில அரசின் இந்தத் திட்டம் ஆனது, நெகிழ்வான மின்சுற்றுப் பலகைகள் (FPCBs), லித்தியம்-அயனி கலன்கள், HDI/MSAP பலகைகள், திரைப் பெட்டகங்கள் மற்றும் பிற கூறுகள் உட்பட சுமார் 11 அதிக உற்பத்திக்கான வளர்ச்சி காணும் பொருள்/கூறுகளை உள்ளடக்கியது.
  • மத்திய அரசானது, சமீபத்தில் ECMS திட்டத்திற்கான வழி காட்டுதல்கள் மற்றும் அதன் இணைய தளத்தினை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்