TNPSC Thervupettagam

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு ஆணையம்

November 10 , 2026 4 days 91 0
  • மாநிலத்தில் உத்திசார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் வசதிப்படுத்தவும் 20 உறுப்பினர்களைக் கொண்ட 'தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தை' தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
  • தலைமைச் செயலாளர் இதன் தலைவராகவும், தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் இதன் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். மேலும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் இதில் இடம்பெறுவர்.
  • இந்த ஆணையம் ₹200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடுகள், 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்புடைய முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் வம்சாவளியினரின் முதலீடுகளைக் கண்காணிக்கும்.
  • வணிகச் செயல்பாடுகள் தொடங்கும் வரை திட்டங்களை இது மேற்பார்வையிடும். மேலும் உரிய நேரத்தில் அனுமதிகள், சலுகைகள் மற்றும் ஒப்புதல்களை வழங்கத் துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு பிணை உத்தரவுகளை வழங்கும்.
  • தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT), தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆகியவற்றால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் நிலங்களின் பயன்பாடு குறித்தும் இது மறுஆய்வு செய்யும்.
  • TIDCO, TIDEL மற்றும் TICEL ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் இந்த ஆணையம் கண்காணிக்கும்.
  • 2036 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாட்டின் இலக்கை இந்த முன்னெடுப்பு ஆதரிக்கிறது.
  • இந்த ஆணையம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் திருத்தப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல் சட்டம், 2018 ஆனது 22 மாநிலச் சட்டங்களின் கீழான ஒப்புதல் காலவரையறையை, பொது மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களைத் தவிர்த்து 21 நாட்களாகக் குறைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்