தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உடனடியாக மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
பெண்கள் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக ‘சிங்கப் பெண் சிறப்புப் படை’ என்ற பெயரில் உயரடுக்கு மகளிர் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப் பட்டது.
மாநிலம் முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மனநலன் பாதிப்பு பொருட்களைத் தடுப்பதற்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்தப் பிரிவு 37 மாவட்டங்கள் மற்றும் 9 நகரங்களில் உள்ள 65 காவல் நிலையங்கள் மூலம் செயல்படும்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி. செந்தில் குமார் முதலமைச்சரின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஜி. லட்சுமி பிரியா முதலமைச்சரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டார்.