TNPSC Thervupettagam

தமிழ்நாடு முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

November 27 , 2026 16 hrs 0 min 39 0
  • வருமான வரம்பின்றி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் காப்பீடு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதலமைச்சரின் முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சுமார் 38 இலட்சம் மூத்த குடிமக்களுக்குக் கட்டணமில்லா சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் நாள்பட்ட நோய்கள், இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான மேம்பட்ட சிகிச்சைகளை உள்ளடக்கியது.
  • வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PM-JAY) சலுகைகளை மத்திய அரசு நீட்டித்ததைத் தொடர்ந்து இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் வராத சுமார் 10.71 இலட்சம் பேர் இதில் இணைவார்கள் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
  • ஏற்கெனவே உள்ள பயனாளிகளுக்கு அரசு நிதியுதவியுடன் கூடிய சிகிச்சை கோரிக்கைகளையும், புதிய பயனாளிகளுக்குக் காப்பீடு அடிப்படையிலான பாதுகாப்பையும் இணைத்து இத்திட்டம் கலப்பின மாதிரியைப் (Hybrid model) பின்பற்றும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்