TNPSC Thervupettagam

தமிழ்நாடு முழுவதும் பதிவான மழைப்பொழிவு 2025

November 3 , 2025 7 days 73 0
  • அக்டோபர் மாதத்தில், தமிழகத்தில் 17.1 செ.மீ என்ற இயல்பு அளவை விட அதிகமாக 23.3 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
  • சென்னையின் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் ஆனது, இந்த தசாப்தத்தின் இரண்டாவது அதிகபட்சமான அக்டோபர் மாத மழைப்பொழிவான 32.4 செ.மீ மழைப் பொழிவைப் பதிவு செய்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மாநிலத்தில் சராசரியை விட 25% அதிகமாக 21.4 செ.மீ மழைப்பொழிவுப் பதிவானது.
  • வடகிழக்குப் பருவமழை பொழிவானது அக்டோபர் மாதத்தின் பெரும்பான்மையான நாட்களில், கிட்டத்தட்ட தினசரி மழைப்பொழிவை ஏற்படுத்தி தீவிரமாக இருந்தது.
  • அக்டோபர் மாதத்தின் போது, தமிழகம் அதற்கான வடகிழக்குப் பருவமழைப் பொழிவு பதிவில் சற்றேறக்குறைய பாதியளவிலான மழைப் பொழிவினைப் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்