தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி vs பாகிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025
June 4 , 2025 9 days 50 0
2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, சுமார் 341 பில்லியன் டாலராக மதிப்பிடப் பட்டுள்ளதோடு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இது இருப்பதாக கூறப்படுகிறது.
2004-05 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆனது சுமார் 132 பில்லியன் டாலராக இருந்தது.
இது தற்போது 338 பில்லியன் டாலரில் இருந்து 373.08 பில்லியன் டாலராக உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆனது, இதே காலக் கட்டத்தில் 48 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 329 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் பொருளாதாரம் ஆனது 2004-05 ஆம் ஆண்டில் சுமார் 92 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 490 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது.