TNPSC Thervupettagam

தமிழ்நாடு வன உயிரின வாரியம்

November 4 , 2026 3 days 73 0
  • முதலமைச்சரின் தலைமையின் கீழ் மாநில வன உயிரின வாரியத்தை தமிழ்நாடு அரசு மறுசீரமைத்துள்ளது.
  • சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 1972 ஆம் ஆண்டின் வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 6(1)-இன் கீழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
  • வனத்துறை அமைச்சர் துணைத் தலைவராகச் செயல்படுவார், மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) உறுப்பினர்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வன உயிரினப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் வன உயிரின அட்டவணைகளில் திருத்தங்கள் செய்வது குறித்து மாநில அரசுக்கு இவ்வாரியம் ஆலோசனை வழங்குகிறது.
  • வன உயிரினப் பாதுகாப்பு தொடர்பாகப் பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் சமூகங்களின் தேவைகளையும் இது நிவர்த்தி செய்கிறது.
  • அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்