TNPSC Thervupettagam

தமிழ்நாடு வருவாய் பெருக்குக் குழு

July 29 , 2026 16 hrs 0 min 39 0
  • மாநிலத்தின் வருவாய் ஆதாரத்தை வலுப்படுத்துவதற்காக வேண்டி மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் தமிழ்நாடு வருவாய் பெருக்குக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
  • வரி மற்றும் வரியற்ற வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், வரி இணக்கத்தை மேம்படுத்துதல், வரிக் கசிவுகளை அடைத்தல், வரி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை முறைப்படுத்துதல் மற்றும் புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிதல் ஆகியவற்றை இக்குழு பரிந்துரைக்கும்.
  • பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) ஈவுத்தொகை, நிலம் மற்றும் சொத்துக்களை பணமாக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயனர் கட்டணங்கள் போன்ற வரியற்ற வருவாய்களையும் இது ஆராயும்.
  • வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் மதுபான வரியின் மூலம் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இக்குழு பரிந்துரைக்கும்.
  • தமிழ்நாட்டின் நிதித் தன்னிறைவை வலுப்படுத்தவும், அதன் மேம்பாட்டு கடமைகளுக்கு ஆதரவளிக்கவும் இக்குழு மூன்று மாதங்களுக்கு செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்