TNPSC Thervupettagam

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு

February 27 , 2026 18 days 125 0
  • சிறப்பு தீவிரத் திருத்தத்திற்குப் பிறகு (SIR) தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது.
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட படி, தமிழ்நாட்டில் 5.67 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
  • பட்டியலில் 2,89,60,838 பெண்கள், 2,77,38,925 ஆண்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள் (5,36,991) உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில் மிகக் குறைந்த வாக்காளர்கள் (1,16,896) உள்ளனர்.
  • தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், 18–19 வயதுடைய வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர் மேலும் 4.63 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் 85 வயதுக்கு மேற்பட்ட 3.99 லட்சம் மூத்த குடிமக்களும் உள்ளனர்.
  • 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 27 உடன் இணைத்து பொருள் கொண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 24(a) இன் கீழ், வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீடுகளை, மாவட்ட ஆட்சியரிடம் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம்.
  • வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,032 ஆக மாறாமல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்