TNPSC Thervupettagam

தமிழ்நாடு வெற்றி வீடுத் திட்டம் 2026

November 11 , 2026 3 days 113 0
  • வெற்றி வீடுத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் 70,000 ஊரக வீடுகளைக் கட்டுவதற்காகத் தமிழ்நாடு அரசு ₹3,500 கோடியை ஒதுக்கியுள்ளது.
  • ஒவ்வொரு தகுதியான குடும்பத்திற்கும் 360-500 சதுர அடியில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் (RCC) கூரையுடன் கூடிய நிரந்தர கான்கிரீட் வீடு கட்ட ₹5 லட்சம் வழங்கப்படும்.
  • கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்த நிதியுதவி நான்கு தவணைகளாக வழங்கப்படும், கழிப்பறை கட்டுவதற்கு கூடுதலாக ₹12,000 வழங்கப்படும்.
  • ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள் மற்றும் ஏற்கனவே அரசின் வீட்டு வசதித் திட்டப் பலன்களைப் பெற்றவர்கள் இதற்குத் தகுதியற்றவர்கள்.
  • மொத்த ஒதுக்கீட்டில் 40% பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) ஒதுக்கப்பட்டுள்ளது; விதவைகள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகள் தொடர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் 3% வட்டி மானியத்துடன் ₹1 லட்சம் வரை வங்கிக் கடனைப் பெறலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்