தமிழ்நாடு வனத்துறை நடத்திய முதல் மாநில அளவிலான அறிவியல் பூர்வ மதிப்பீட்டில் 51 வகையான வேட்டையாடும் பறவை இனங்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு வேட்டையாடும் பறவைகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
இதில் 40 பகலாடி வேட்டையாடும் பறவை இனங்களும், 11 இரவாடி வேட்டையாடும் பறவை இனங்களும் கண்டறியப்பட்டன.
இதில் வெண்முதுகுப் பாறுக்கழுகு, செந்தலைப் பாறுக்கழுகு மற்றும் இந்தியப் பாறுக் கழுகு போன்ற அரிய மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்களும் அடங்கும்.
இந்த மதிப்பீடு மாநிலத்தில் வேட்டையாடும் பறவைகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் வாழ்விடப் பாதுகாப்பிற்கான அடிப்படைத் தரவுகளை வழங்குகிறது.