TNPSC Thervupettagam

தமிழ்நாடு-ஹரப்பா வர்த்தகம்

September 25 , 2025 15 hrs 0 min 57 0
  • திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் ஒரு சுடுமண் ஈமப்பேழை (சவப்பெட்டி) கண்டெடுக்கப்பட்டது.
  • இது துகள் முடுக்கி மூலமான திரள் நிறமாலை (AMS) நுட்பம் மூலமான கதிரியக்க கார்பன் மூலமான காலக் கணிப்பு மூலம் அறிவியல் பூர்வமாக கிமு 1692 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது.
  • புதைவிடத்திலிருந்து எடுக்கப்பட்ட கரியின் காலம், அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தினால் கண்டறியப்பட்டது.
  • புதைவிடத்தில் காணப்படும் உருவங்கள் பொறிக்கப்பட்ட கார்னிலியன் மணிகள், ஹரப்பா காலத்தின் பிற்பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துடனான வர்த்தக தொடர்புகளைக் குறிக்கின்றன.
  • சவப்பெட்டிக்கு அருகில் காணப்படும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள், தமிழ்நாட்டின் சுவரோவிய அடையாளங்கள் கிமு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதைக் குறிக்கின்றன.
  • 140 தளங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 90% சுவரோவிய சின்னங்கள் ஆனது சிந்து சமவெளி நாகரிகத் தளங்களிலிருந்து பெறப்பட்டவற்றுடன் நன்கு பொருந்துவதாகக் கண்டறியப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்