தமிழ்நாடு – தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அதிக வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம்
March 31 , 2021 1598 days 778 0
ஒரு அறிக்கையின்படி, வாக்கெடுப்பிற்கு உட்பட்ட மாநிலங்களில், ரூ.65,994 கோடி மதிப்பில் அதிக வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
இது 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி கூறப் படுகிறது.
பொருளாதார அளவின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பொருளாதாரமானது இந்தியாவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும்.
அதனையடுத்து மேற்கு வங்காளம் (6வது), கேரளா (11வது) அசாம் (17வது) மற்றும் புதுச்சேரி (26வது) ஆகியவை உள்ளன.
ஒட்டு மொத்தமாக இவை இந்தியப் பொருளாதாரத்தின் 20% பங்காகும்.
இவ்வறிக்கையின்படி 2020 ஆம் நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அசாம் மாநிலம் 8.6% என்ற அளவில் அதிகபட்ச சராசரி பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியானது தேசத்தின் சராசரி வளர்ச்சி வீதத்திற்கு இணையாக உள்ளது.
2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக கேரள மாநிலத்தின் வளர்ச்சி 6.3% என்ற வீதத்தில் சராசரி தேசிய வளர்ச்சி வீதத்தை விட குறைவாகவே உள்ளது.