தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகள்
August 14 , 2019 2192 days 1598 0
நகராட்சி நிர்வாக ஆணையமானது தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயலாற்றும் மாநகராட்சியாக சேலம் மாநகராட்சியையும் சிறப்பாகச் செயலாற்றும் நகராட்சியாக தர்மபுரி நகராட்சியையும் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைகள் மாநில அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நகரங்கள் முதலமைச்சர் விருதினைப் பெறவிருக்கின்றன.
வேதாரண்யம் மற்றும் அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது நகராட்சிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயலாற்றும் மாநகராட்சி விருதை திருப்பூர் மாநகராட்சி பெற்றது. 2018 ஆம் ஆண்டில் கோவில்பட்டி, கம்பம் மற்றும் சீர்காழி ஆகிய நகராட்சிகள் முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து சிறப்பாகச் செயலாற்றும் நகராட்சி விருதினைப் பெற்றுள்ளன.