தமிழ்நாட்டின் நான்காவது பல்லுயிர் பாரம்பரியத் தளம்
October 11 , 2025 13 hrs 0 min 15 0
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்று ஆனது தமிழ்நாட்டின் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் கீழ் நியமிக்கப் பட்டு உள்ளது.
32.22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தளமானது, ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற நில விளிம்புகள், சேற்றுப் பகுதிகள் மற்றும் பாறைப் படிமங்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்களை ஆதரிக்கிறது.
இரும்பு காலத்தினைச் சேர்ந்த பரல் உயர் பதுக்கைகள், பழங்காலப் பாறை வாழ்விடங்கள் மற்றும் 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயரின் கல் சிலை கொண்ட இந்தத் தளம் ஆனது தொல்பொருள் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற மூன்று பல்லுயிர் பாரம்பரியத் தளங்கள் மதுரையில் உள்ள அரிட்டாபட்டி, திண்டுக்கல்லில் உள்ள காசம்பட்டி மற்றும் ஈரோட்டில் உள்ள ஏலத்தூர் ஏரி ஆகியனவாகும்.