TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் நிதிசார் தரவுகள் 2026–27

February 21 , 2026 2 days 25 0
  • நிதிசார் புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு அரசின் 2026–27 இடைக்காலப் பட்ஜெட் மதிப்பீடுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
  • 2026–27 இடைக்காலப் பட்ஜெட்டின் மதிப்பீடுகளில் தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் 10.71 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2025–26-இன்  திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், இது 9.52 லட்சம் கோடியாகும் என்பதோடு இது 2025–26 பட்ஜெட் மதிப்பீடுகளில் 9.29 லட்சம் கோடி ஆக இருந்தது.
  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இரண்டாம் கட்டத்தை மத்திய துறை திட்டமாக அங்கீகரிப்பது தொடர்பான 9,523 கோடி கடன் தொகையும் இதில் அடங்கும் என்பதோடு இது பின்னர் மத்திய அரசின் கணக்குகளில் பிரதிபலிக்கும்.
  • இந்தத் தொகையைத் தவிர்த்து, நிலுவையில் உள்ள கடன் 9.42 லட்சம் கோடி (திருத்தப் பட்ட மதிப்பீடுகள் 2025–26) மற்றும் 10.62 லட்சம் கோடி (இடைக்காலப் பட்ஜெட் மதிப்பீடுகள் 2026–27) ஆகும்.
  • 2026–27 ஆம் ஆண்டில் 1.79 லட்சம் கோடி கடன் வாங்கவும், அதே காலக் கட்டத்தில் 60,413.42 கோடியை திருப்பிச் செலுத்தவும் மாநிலம் திட்டமிட்டுள்ளது.
  • கடன் மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு இடையே உள்ள (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) விகிதம் 26.12% என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2026–27 ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 48,696.32 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2025–26 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இது 69,219 கோடியாகவும், 2025–26 ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் 41,635 கோடியாகவும் இருந்தது.
  • 2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 1.21 லட்சம் கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது என்பதோடு இது 2025–26 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1.24 லட்சம் கோடியாக இருந்தது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 3.48%-இல் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 2025–26) இருந்து 3% (இடைக்காலப் பட்ஜெட் மதிப்பீடுகள் 2026–27) ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 9வது நிதி ஆணையத்தின் நிதி பகிர்விற்குப் பிறகு, மத்திய வரிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 7.9% இலிருந்து 4.079% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இதன் விளைவாக 3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற நிலையில் மாநிலத்தின் நிலுவையில் உள்ள கடனில் இது சுமார் 33% ஆகும்.
  • 16வது நிதி ஆணையத்தில், கேரளா மற்றும் கர்நாடகா முறையே 23.74% மற்றும் 13.27% அதிகரிப்பைப் பெற்றன, அதே நேரத்தில் தமிழ்நாடு 0.44% அதிகரிப்பை மட்டுமே பெற்றது என்பதோடு இது ஒப்பிடக் கூடிய மாநிலங்களின் அளவில் மிகக் குறைவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்