தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் மேம்பாட்டுச் செயல்திறன்
February 16 , 2026 17 hrs 0 min 13 0
தமிழ்நாடு இந்தியாவில் மிக உயர்ந்த தனிநபர் வருமான வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது என்பதோடு இது 2020–2021 இல் 0.07% இலிருந்து 11.19% ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2020–2021 இல் ₹2,09,628 இலிருந்து ₹3,61,619 ஆக அதிகரித்து, ₹1.76 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) 2020–2021 இல் இருந்த ₹17.89 லட்சம் கோடியிலிருந்து 2024-25 இல் ₹31.19 லட்சம் கோடியாக அதிகரித்து, சுமார் 16% வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் வறுமை விகிதம் 2020–2021 ஆம் ஆண்டில் இருந்த 2.20%-இல் இருந்து 1.43% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது சுமார் 11.2% வீழ்ச்சியைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2020–2021 ஆம் ஆண்டில் 64.93 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து தற்போது 80.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து, இந்தியாவின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக மாநிலத்தை மாற்றியது.
2020–2021 ஆம் ஆண்டில் 3வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டு மதிப்பெண் 2020–2021 ஆம் ஆண்டில் 74 புள்ளிகளிலிருந்து தற்போது சுமார் 78.8 புள்ளிகளாக அதிகரித்துள்ளது என்ற நிலையில் மேலும் தமிழகம் இந்தியாவில் 3வது இடத்தைப் பிடித்தது.