TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2025

December 19 , 2025 3 days 125 0
  • நடப்பு விலையில், 2023-24 ஆம் ஆண்டில் 26.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2024-25 ஆம் ஆண்டில் 31.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • இதனால், இதில் 16% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில், உற்பத்தித் துறை முக்கியப் பங்குடன் நடப்பு விலையில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவானது.
  • அதே காலக் கட்டத்தில், தமிழ்நாட்டின் உற்பத்தி GSDP என்பது 1.46 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
  • இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 40,121 தொழிற்சாலைகள் உள்ளன என்பதோடு அவை சுமார் 24.75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
  • 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 11% வளர்ச்சியுடன், கட்டுமானத் துறையும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
  • சேவைத் துறை மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலில் கிட்டத்தட்ட சுமார் 53% என்ற அளவிற்குப் பங்களிக்கிறது.
  • இது 2024-25 ஆம் ஆண்டில் 11.3% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
  • 2025-26 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 27% ஆக இருந்த கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2024-25 ஆம் ஆண்டில் 26% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்