தமிழ்நாட்டின் முதல் இரு கைகள் மாற்று அறுவை சிகிச்சை
February 12 , 2019 2293 days 823 0
திண்டுக்கல்லைச் சேர்ந்த 29 வயதான நாராயணசாமிக்கு வெற்றிகரமான முதலாவது கைமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் இறுதியாக சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முதலாவது இரு கை மாற்று அறுவை சிகிச்சை 13 மணி நேர அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது.
விபத்து ஒன்றில் பலியான, மூளைச் சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட ஒரு ஜோடி கைகளுடன் மருத்துவர்கள் நாராயணசாமிக்கு அவரது முழங்கைக்கு கீழே வைத்து மீண்டும் அவருக்கு இரு கைகளையும் பொருத்தினர்.