TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான காரணி - அனைவருக்கும் கல்வி

August 3 , 2025 4 days 30 0
  • கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மகத்தான பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன.
  • சமூக நீதி நமது சித்தாந்தம் என்றால், அதை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு கல்வியே அதன் மிகவும் பயனுள்ள கருவியாகும்.
  • அனைவருக்கும் கல்வி என்பது, அதை பெறக் கூடியவர்கள் அல்லது அதற்கான "தகுதி" உள்ளவர்கள் ஆகியோருக்கு மட்டுமல்ல, அது சமத்துவப்படுத்தும் தன்மை மற்றும் செயல்படுத்தும் தன்மை ஆகிய வகைகளிலும் செயல்படுகிறது.
  • சமத்துவமான தமிழ்ச் சமூகத்தை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கான அடித் தளம் இதுதான்.
  • 1920 ஆம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளி, இந்தியாவில் முதன்முதலில் மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கியது.
  • இந்த முயற்சி அப்போதைய சென்னை மாநகராட்சி மன்றத்தால் அங்கீகரிக்கப் பட்டு நீதிக்கட்சித் தலைவர் P. தியாகராய செட்டியால் ஈர்க்கப் பட்டது.
  • இந்த யோசனை உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள பள்ளி உணவுத் திட்டங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.
  • இந்த அரசாங்கத்தால் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்துடன் இது விரிவடைந்துள்ளது.
  • கற்றல் சார்ந்த விளைவுகளை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ்நாடு தனது கல்விக் கொள்கையை எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதை விளக்கும் பல சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • உயர்கல்வியில் தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) 47% ஆக உள்ள அதே நேரத்தில் தேசிய சராசரி 28.4% ஆகும்.
  • பெண்களில் 47.3% ஆக உள்ள தமிழ்நாட்டின் GER என்பது தேசிய அளவான 28.5%-ஐ விட அதிகமாக உள்ளது.
  • 1921 ஆம் ஆண்டில், நீதிக்கட்சியானது வகுப்புவாத அரசாணை என்று அறியப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாங்க ஆணையை (GO) நிறைவேற்றியது.
  • இது அனைத்துச் சமூகங்களிலிருந்தும், குறிப்பாக விளிம்புநிலைச் சமூகங்களின் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்