தமிழ்நாட்டில் CMCHIS மற்றும் PMJAY-இன் ஒருங்கிணைந்த பதிப்பு துவக்கம்
September 25 , 2018 2432 days 878 0
மத்திய அரசின் சிறப்பு வாய்ந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்து ஒரு ஒருங்கிணைந்த முன்முயற்சி திட்டமாக தமிழ்நாடு அரசானது (செப்டம்பர் 23) தொடங்கியுள்ளது.
இந்த CMCHIS (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme) ஆனது மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் 2012-இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டமானது ஏழைகளுக்கும் சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வசதியுடைய மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையளிப்பதற்காக முழுவதும் மாநில அரசால் நிதியளிக்கப்படும் திட்டமாகும்.