தொல்பொருள் ஆய்வுகள், அகழாய்வுகள் மற்றும் நீருக்கடி ஆய்வுகளுக்கான வருடாந்திர ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ₹7 கோடியில் இருந்து ₹10 கோடியாக உயர்த்தியுள்ளது.
தொல்பொருட்கள் மற்றும் அகழாய்வு மாதிரிகளை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்ய ₹2 கோடி செலவில் நவீன தொல்லியல் ஆய்வகம் அமைக்கப்படும்.
தமிழ் மரபுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், முதற்கட்டமாக 76 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் ஐந்து ஆண்டுகளில் சீரமைக்கப்படும்.
பண்டைய தமிழ் கல்வெட்டுகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி டிஜிட்டல் தரவுதளம் உருவாக்கப்படும்.
பண்டைய தமிழர்களின் கடல்சார் வணிகத் தொடர்புகள் மற்றும் பண்டைய துறைமுகங்களை ஆவணப்படுத்த மூன்று ஆண்டு ஆராய்ச்சிக்கு ₹3 கோடி செலவிடப் படும்.
மாநில அரசு 15 வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்கப் பட்ட தொல்லியல் இடங்களாக அறிவிக்கும்.