TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் உறுப்பு தானங்கள்

February 19 , 2026 4 days 69 0
  • ஜனவரி 2026 இல் 33 நன்கொடையாளர்களுடன் தமிழ்நாடு அதன் அதிகபட்ச மாதாந்திர இறந்த உறுப்பு தானங்களைப் பதிவு செய்தது.
  • அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையிலான நன்கொடையாளர்கள் (5) பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு இது மாற்று அறுவை சிகிச்சை செய்யாத உறுப்பு மீட்பு மையமாக (NTORC) செயல்படுகிறது.
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4 பேர், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 2 பேர் பேர் கொடையாளர்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.
  • கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள பிற மருத்துவ மனைகளில் தலா ஒரு கொடையாளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • 2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்த 266 உறுப்பு தானம் பெற்றவர்கள் பதிவு செய்யப்பட்டனர் என்பதோடு மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் 43 நாட்களில் 42 தானங்கள் பதிவு செய்யப் பட்டன.
  • இறந்த கொடையாளர் உறுப்பு மாற்றுத் திட்டம் ஆனது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதோடு மேலும் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு ஆணை (GO) 331, மூளைச்சாவு அடைந்த கொடையாளர்களை அரசு மரியாதையுடன் கௌரவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்