TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள்

June 22 , 2026 16 days 161 0
  • தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் (TNGECL) கீழ் ஐந்து பிரத்யேக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஐந்து மண்டல தலைமையகங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
  • திட்ட ஒப்புதல்கள், ஒருங்கிணைப்பு மற்றும் மின் வெளியேற்ற உள்கட்டமைப்பு உள்ளிட்ட காற்று மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை நிர்வகிக்க இந்த மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
  • புதிய அமைப்பு காற்றாலைகளை மறுசீரமைப்பதற்கும் (பழைய காற்றாலைகளை புதியவற்றுடன் மாற்றுவது அல்லது மேம்படுத்துவது) துணைபுரிகிறது.
  • மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் (BESS), PM-KUSUM 2.0, பிரதான் மந்தரி கூரையில் அமைக்கப்பட்ட சூரியசக்தி அமைப்பு மற்றும் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு இந்த மண்டலங்கள் ஆதரவளிக்கும்.
  • மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் (BESS) பின்னர் பயன்படுத்துவதற்காக மின்சாரத்தைச் சேமிக்கின்றன என்பதோடு மேலும் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டங்களானது நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நிறுவப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்