தமிழ்நாட்டில் கடற்பசுக்களின் எண்ணிக்கை 270 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாக் வளைகுடாவும் மன்னார் வளைகுடாவும் தற்போது இந்தியாவில் கடற்பசுக்களின் மிகப்பெரிய, நிலைத்த வாழ்விடமாகத் திகழ்கின்றன.
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
இந்தக் கணக்கெடுப்பில் பாக் வளைகுடாவில் 158 கடற்பசுக்களும், மன்னார் வளைகுடாவில் 112 கடற்பசுக்களும் கண்டறியப்பட்டன.
இந்த அதிகரிப்பிற்கு, இழப்பீட்டுக்கு இணையான வனமயமாக்கல் நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் (CAMPA) ஆதரவுடன் இந்திய வனவிலங்கு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட கடற்பசு மீட்புத் திட்டமே முக்கியக் காரணமாகும்.
பாக் வளைகுடாவில் 448 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான முக்கிய வாழ்விடத்தை உள்ளடக்கிய கடற்பசு பாதுகாப்பு சரணாலயமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) மூலம் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதல் முறையான வான்வழி எண்ணிக்கை மதிப்பீடாகும்.
2012-2013 ஆம் ஆண்டுகளில் நேர்காணல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய மதிப்பீடுகள், சுமார் 175 கடற்பசுக்கள் இருந்ததாகக் குறிப்பிட்டன. இது தற்போதைய கடற்பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.
ஆளில்லா விமான செயல்திறன், மின்கலன்களின் ஆயுள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட, நிலையான 3 கி.மீ. நீளமுள்ள பாதைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன இதனால் ஆழமான நீர்ப்பகுதிக்குச் சென்ற சில கடற்பசுக்கள் கணக்கிடப்படாமல் போயிருக்கலாம்.