கழுகு வளங்காப்பு மண்டலங்களை (VSZs) அமைப்பதற்கான செயல்முறை தொடங்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள மோயார் நதிப் பள்ளத்தாக்கைச் சுற்றி முதல் VSZ உருவாக்கப்படும்.
இது தமிழ்நாட்டில் கழுகு வளங்காப்புக்கான தொலைநோக்குத் திட்ட ஆவணத்தின் (VDVC) கீழ் 2025–2030 ஆம் கால கட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் (PCCF-cum-CWC) ஒரு கள அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளார்.
கழுகுகளைக் கொல்லும் டைக்ளோஃபெனாக் போன்ற தடை செய்யப்பட்ட கால்நடைப் பயன்பாட்டு ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் (NSAID) பயன்பாட்டை நிறுத்துவதே VSZ மண்டலங்களின் நோக்கமாகும்.