TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் குறைவான தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டங்கள்

May 8 , 2024 12 days 138 0
  • தமிழ்நாட்டில் 2019-20 ஆம் ஆண்டில் (2,36,783 ரூபாய்) இந்த மாநிலச் சராசரியை விட குறைவான தனிநபர் வருமானம் கொண்ட 19 மாவட்டங்கள் உள்ளன.
  • மீதமுள்ள 13 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இந்த மாநிலத்தின் சராசரியை விட அதிகமாக உள்ளன.
  • சுமார் 3.64 லட்சம் தனிநபர் வருமானத்துடன் திருவள்ளூர் மாவட்டம் முதலிடத்திலும், ஈரோடு (3.57 லட்சம் ரூபாய்), கோவை (3.39 லட்சம் ரூபாய்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • அந்த ஆண்டில் இந்த மாவட்டங்களில், தெலுங்கானா, ஹரியானா மற்றும் கர்நாடகா உட்பட முக்கிய இந்திய மாநிலங்களையும் விட தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது.
  • கடைசி இடங்களில் பெரம்பலூர் (ரூ. 1,07,731), திருவாரூர் (ரூ. 1,25,653), விழுப்புரம் (ரூ. 1,30,103) ஆகியவை உள்ளன.
  • ஆனால் இந்த மாவட்டங்களின் நிலைகள் அதே ஆண்டில் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவற்றினை விட "அதிகமாக" இருந்தன.
  • இருப்பினும், அவை அந்த ஆண்டிற்கான 1.32 லட்சம் என்ற அகில இந்திய மதிப்பினை விட குறைவாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்