கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை 10% உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பு 8% லிருந்து 16% ஆக அதிகரிக்கும்.
அரசு மற்றும் பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகளைக் கொண்டு தமிழ்நாடு பின்னலாடை வாரியம் அமைக்கப்படும்.
உயர்தர பட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்படும்.
1,000 கைத்தறி அலகுகளில் சூரிய ஒளிமின் தகடுகள் அமைக்க 100% மானியம் வழங்கப் படும், அதே நேரத்தில் ₹1 கோடி செலவில் இயற்கை சாயகம் ஒன்று நிறுவப் படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ₹20 லட்சம் செலவில் திருபுவனம் பட்டுக்கான வடிவமைப்பு மையம் அமைக்கப்படும், மேலும் கரூரில் வீட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.