சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) ஆனது இந்தியாவில் சாலை விபத்துகள் 2023 அறிக்கையை வெளியிட்டது.
2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 67,213 சாலை விபத்துகள் பதிவானது, இது தேசிய அளவிலான மொத்த விபத்துகளில் 14% ஆகும்.
2022 ஆம் ஆண்டில் 64,105 ஆக இருந்த தமிழ்நாட்டில் பதிவான சாலை விபத்துகள் 4.6% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் சாலை விபத்து காரணமாக 18,347 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் 17,884 ஆக இருந்த எண்ணிக்கையை விட 2.5% அதிகமாகும்.
உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக சாலை விபத்து காரணமான மொத்த உயிரிழப்புகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வேகம் காரணமாக 13,363 விபத்துகளும் 3,932 உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் குழந்தைகள் உட்பட இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், குழந்தைகளுக்கான தலைக்கவசம் / ஹெல்மெட் விதிமுறைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
தமிழ்நாடு அரசானது 2007 ஆம் ஆண்டில் ஒரு சாலைப் பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டது, ஆனால் அதன் நிலையான அமலாக்கம் பேணப் படவில்லை.
தமிழ்நாட்டிற்கு 2030 ஆம் ஆண்டு இலக்குகள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான வேக மேலாண்மை வழிகாட்டுதல்களுடன் கூடிய மாநிலச் சாலைப் பாதுகாப்பு செயல் திட்டம் அவசியமாகும்.