இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மற்றும் மாநில அரசு இடையேயான கலந்துரையாடல்களின் கீழ் 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு செயற்கை மழை உருவாக்கம் (மேக விதைப்பு) குறித்து ஆராயத் தொடங்கியது.
முதல் சோதனைகள் ஆனது, 1973 ஆம் ஆண்டில் திருவள்ளூரில் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மூலம் நடத்தப்பட்டன, ஆனால் எந்த உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை.
1975 ஆம் ஆண்டில், ஒரு கனடா நாட்டு நிறுவனம் ஆனது சென்னை மற்றும் நீலகிரிகளில் 12 லட்சம் செலவில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதோடுஇதில் மழைப்பொழிவில் சுமார் 20% அதிகரிப்பைப் பதிவு செய்தது.
1983 ஆம் ஆண்டில், தாமஸ் ஹென்டர்சன் தலைமையிலான ஓர் அமெரிக்கக் குழுவால் 26 லட்சம் ரூபாய் செலவில் மற்றொரு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற நிலையில்அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.
மேக விதைப்புக்காக மாநில அரசு 1983 ஆம் ஆண்டில் ஒரு விமானத்தை வாங்கியது.
1993 ஆம் ஆண்டில், புதிய சோதனைகள் நடத்தப்பட்டன ஆனால் மழைப்பொழிவு அதிகரிப்பு ஆனது இயல்பை விட 20 சதவீதத்திற்கும் மேலாக பதிவாகவில்லை என்று அறிவியலாளர்கள் முடிவு செய்தனர்.
2003 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல பிந்தையத் திட்டங்கள் பொருத்தமற்ற வானிலையின் காரணமாக செயல்படுத்தப்பட வில்லை.
கிருஷ்ணா நீர், வீராணம் ஏரி மற்றும் உப்பு நீக்கும் ஆலைகள் சேர்க்கப்பட்டதன் மூலம், தமிழ்நாடு செயற்கை மழையைச் சார்ந்திருப்பது என்பது சமீபத்திய ஆண்டுகளில் தேவையற்றதாகி விட்டது.