தமிழ்நாடு நெல் கொள்முதலில் சாதனை ஒன்றைப் படைக்க உள்ளது.
இது விரைவில் 45 லட்சம் டன் என்ற இலக்கைத் தொட உள்ளது.
தற்போது வரையில், 44.49 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை, கொள்முதல் சாதனை என்பது 2020-21 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட 44.95 லட்சம் டன் ஆகும்.
நம் மாநில அரசானது விவசாயிகளிடமிருந்து சராசரியாக தினமும் சுமார் 15,000 டன் கொள் முதல் செய்கிறது.
ஒட்டு மொத்த அளவு இறுதியில் 47 லட்சம் டன் ஆகலாம்.
தற்போதைய திமுக ஆட்சியானது, 2021-22 ஆம் ஆண்டில், 50 லட்சம் டன் இலக்கை நிர்ணயித்திருந்தது, ஆனால் அப்போது அந்த இலக்கினை அடைய முடியவில்லை.
கடந்த காலத்தைப் போலவே, காவிரி டெல்டா பாசனத்தின் கீழ் வரும் 10 மாவட்டங்கள் மொத்தக் கொள்முதலில் சுமார் 30 லட்சம் டன்களுடன் மூன்றில் இரண்டு பங்கை வழங்கியுள்ளன.
குறைந்தபட்ச ஆதரவு விலையாக, சுமார் 10,734 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
மத்திய அரசு அதிகாரிகளிடம் உள்ள தரவுகளின் படி, முதல் சுற்றில் (2024 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை) சுமார் 3.36 லட்சம் விவசாயிகள் 6,899 கோடி ரூபாயையும், பின்னர் சுமார் 1.95 லட்சம் விவசாயிகள் 3,835 கோடி ரூபாயையும் பெற்று உள்ளனர்.
மேலும், A தரத்தில் உள்ள மற்றும் பொதுவான வகைகளுக்கு மாநில அரசு முறையே குவிண்டாலுக்கு 130 மற்றும் 105 ரூபாய் வழங்கி வருகிறது.
பெரும்பாலான கொள்முதல் ஆனது தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்தால் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
மீதமுள்ளப் பகுதியை தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மேற் கொள்கிறது.
இந்தக் கொள்முதலில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPO) ஈடுபட வேண்டும் என்று நிபுணர்களிடமிருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.