TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பதிவு நீக்கப்பட்ட அரசியல் கட்சிகள்

September 24 , 2025 3 days 40 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று தமிழ்நாட்டினைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளைப் பட்டியலில் இருந்து நீக்கியது.
  • 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டது.
  • தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளைப் பதிவு செய்யப் பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கலாம்.
  • பாதிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPPs) ஆகும்.
  • இது தேர்தல் ஆணையத்தின், தேர்தல் முறையின் இரண்டாம் கட்ட சீர்மையாக்கத்தின் ஒரு பகுதியாகும்.
  • தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
  • தமிமுன் அன்சாரி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
  • N. R. தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
  • 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பெரம்பூரில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட N. R. தனபாலன் தோல்வியடைந்தார்.
  • ஒரு கட்சியானது பதிவு செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடுவதாக அதன் அரசியலமைப்பில் அறிவிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்