சமீபத்திய அடிப்படை கால்நடைப் பராமரிப்பு (BAH) புள்ளி விவரங்கள், தீவனம் மற்றும் தீவனப் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாட்டில் கலப்பினப் பசுவின் பால் உற்பத்தி கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருப்பதாகக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில், 2018 மற்றும் 2025க்கு இடையில் கலப்பினப் பசுவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 7.1 கிலோவாகவே உள்ளது.
இது 2023–24 இல் ஒரு நாளைக்கு 7.03 கிலோவிலிருந்து 2024–25 இல் ஒரு நாளைக்கு 7.84 கிலோவாக உயர்ந்துள்ளது என்ற நிலையில்இது ஒரு சிறிய முன்னேற்றத்தை மட்டுமே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் தீவனப் பயிர்களின் பரப்பளவு 48,000 ஹெக்டேரிலிருந்து (2018–19) 35,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது (2025).
கர்நாடகாவில், தீவனப் பயிர் பரப்பளவு 71,000 ஹெக்டேரிலிருந்து 90,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்ற நிலையில் கலப்பின கால்நடைகள் ஒரு நாளைக்கு சுமார் 10.71 கிலோ பால் உற்பத்தி செய்கின்றன.
கர்நாடகா பால் மானியத்தை லிட்டருக்குச சுமார் ₹5 (சமீபத்தில் லிட்டருக்கு ₹7 ஆக அதிகரிக்கப் பட்டது) என்ற அளவில் வழங்குகிறஅதே நேரத்தில் தமிழ்நாடு லிட்டருக்கு ₹3 வழங்குகிறது.
ஆவின் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 30–35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது, இருப்பினும் அதன் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் ஆகும்.