முதலமைச்சர் தமிழ்நாட்டில் மொத்தம் 67 கோடி ரூபாய் செலவில் நான்கு தொழிற் பேட்டைகளை காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
காவேரிராஜபுரம் (திருவள்ளூர்), முத்தூர் (திருநெல்வேலி), கடம்பாடி (செங்கல்பட்டு), கொருக்கை (திருவாரூர்) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப் பட்டு உள்ளன.
கடலூர் (மருதாடு) மற்றும் கோயம்புத்தூர் (கிட்டம்பாளையம்) ஆகிய இரண்டு தனியார் தொழிற்பேட்டைகளையும் திரு.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கத்தில் ஒரு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் காணொளி வாயிலாகத் திறக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உணவுப் பதப்படுத்துதல் தொகுதியில் ஒரு பொது மையம் திறக்கப்பட்டது.