TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பெண்களின் நிலைமைகள்

February 21 , 2026 2 days 25 0

  • மாநில திட்ட ஆணையத்தின் (SPC) 2025–26 பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை எடுத்துக் காட்டுகிறது.
  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5) அடிப்படையிலான மதிப்பீடுகளின் படி, சக மாநிலங்களில் அதிக இரத்த உறவுகளுக்கிடையே திருமணங்கள் (28%) நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
  • இதன் அகில இந்திய சராசரி 10.8% ஆக உள்ளது, அதைத் தொடர்ந்து கர்நாடகா (26.6%), மகாராஷ்டிரா (14.8%), குஜராத் (6.4%) மற்றும் கேரளா (4.4%) ஆகியவை உள்ளன.
  • குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபருக்கும் நிகழும் திருமணமாகும்."
  • 20–24 வயதுடைய ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட திருமணமாகும்.
  • தமிழ்நாட்டில், கிராமப்புறங்களில் 15.2% பெண்களும், நகர்ப்புறங்களில் 10.4% பெண்களும் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் நிலையில், இது இந்த மாநிலத்தின் சராசரியை 12.8% ஆக ஆக்குகிறது என்பதோடு இது அகில இந்தியச் சராசரியான 23.3% உடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
  • தமிழ்நாட்டில் 25–29 வயதுடைய பெண்களின் முதல் திருமணத்தின் சராசரி வயது 22 ஆண்டுகள் ஆகும் என்பதோடு இது அகில இந்தியச் சராசரியான 19.7 ஆண்டுகளை விட அதிகம்.
  • தமிழ்நாட்டில் பெண் கல்வியறிவு (15–49 வயதுடைய பெண்கள்) 84% ஆகும் என்பதோடு மேலும் 24.3% பெண்கள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.
  • கேரளாவில் மட்டுமே அதிக அளவு (97% கல்வியறிவு மற்றும் 30.4% பள்ளிப்படிப்பு) உள்ளது என்பதோடு மகாராஷ்டிரா 82.3% கல்வியறிவு மற்றும் 20.9% பள்ளிப்படிப்புடன் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக உள்ளது.
  • அகில இந்திய சராசரி கல்வியறிவு 71.5% மற்றும் பள்ளிப்படிப்பு 16.6% ஆக உள்ளது.
  • தமிழ்நாட்டில் சுமார் 92% பெண்கள் சொந்தமாக வங்கி அல்லது சேமிப்புக் கணக்கை வைத்துள்ளனர் என்பதோடு தேசிய சராசரி மற்றும் பெரும்பாலான சக மாநிலங்களை விட இது அதிகமாகும்.
  • நுண்கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு 74% ஆகும் என்பதோடு மேலும் 18% பெண்கள் அவர்களிடமிருந்து கடன் வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.
  • சக மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் அதிக தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் (83.4%) உள்ளனர், ஆனால் அச்சு ஊடக வாசகர்கள் எண்ணிக்கை பெண்களில் 14.5% மட்டுமே.
  • சுமார் 47% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதோடு மேலும் கிராமப்புற-நகர்ப்புற டிஜிட்டல் இடைவெளி அதிகமாக உள்ளது ஏனெனில் சுமார் 69% கிராமப்புற பெண்கள் கைபேசி வைத்திருக்கும் நிலையில் சுமார் 39% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
  • தமிழ்நாட்டில் 9.9% என்ற அளவில் இறந்து பிறக்கும் குழந்தைகளின் விகிதம் அதிகமாக உள்ளது என்பதோடு இது கேரளாவில் 6.5% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்