தமிழ்நாட்டில் பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள்
November 9 , 2026 5 days 81 0
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 50% க்கும் அதிகமானவை பெண்களால் வழி நடத்தப் படுகின்றன.
தமிழ்நாட்டில் 16,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 50.8% பெண்கள் தலைமையிலானவை.
சென்னையில் நடைபெற்ற பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் (BoB) மாநாடு மற்றும் விருதுகள் 2026-இல் இந்த தரவுகள் அறிவிக்கப்பட்டன.
பியர்-லேர்னிங் (சக குழு கற்றல்) குழுக்கள் மூலம் பணியிட உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக அவதார் கரியர் கிரியேட்டர்ஸ் லிமிடெட் மற்றும் செராமவுண்ட் நிறுவனங்கள் இணைந்து உள்ளடக்கிய கலாச்சாரங்களின் வட்டம் (CIC) எனும் அமைப்பினைத் தொடங்கின.
இந்த மாநாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு, பணியிட உள்ளடக்கம், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) நடைமுறைகள் மற்றும் பணியிட நல்வாழ்வு ஆகியவற்றுக்காக நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டன.