தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி விவரம்
September 10 , 2026 3 days 66 0
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BCs), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBCs) மற்றும் சீர்மரபினர் (DNCs) ஆகியோரை கணக்கெடுப்பதற்கான ‘திறந்த பத்தி முறையை’ (Open-Column Method) நீக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.
சாதித் தரவுகள் சேகரிப்பிற்காக, 2027 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பு இணைய தளத்தில் அறிவிக்கப்பட்ட BC, MBC மற்றும் DNC பட்டியல்களை முன்-பதிவேற்றம் செய்யுமாறு இத்தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்தியது.
பட்டியலிடப்பட்ட சாதியினர் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) கணக்கெடுக்கப்படுவது போலவே BC, MBC மற்றும் DNC மக்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்றும், பதிலளிப்பவர்கள் தங்களின் சாதியை தாங்களே சுய பிரகடனம் செய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக இம்முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரியது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் (OBCs) சாதி விவரங்கள் விடுக்கப்பட்டதால், துல்லியமான சாதி வாரித் தரவுகள் தேவை என்று இத்தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.