தமிழ்நாட்டில் மொத்தம் ₹1,012 கோடி திட்டச் செலவில் இரண்டு மின்னணு உற்பத்தித் தொகுப்புகளுக்கு (EMCs) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணலூர் (474.3 ஏக்கர்) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப் பாக்கம் (379.3 ஏக்கர்) ஆகிய இடங்களில் இந்த மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் உருவாக்கப் படும்.
இத்திட்டங்கள் மின்னணு உற்பத்தியை வலுப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
செமிகான் இந்தியா திட்டத்தின் (Semicon India Programme) கீழ், நாடு முழுவதும் உள்ள 315 நிறுவனங்களில் குறைக்கடத்தி திறன் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் உள்ள 61 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது.
2026 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று அங்கீகரிக்கப்பட்ட செமிகான் 2.0, முழுமையான குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் மேலும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.