தமிழ்நாட்டில் முதல் மாநில அளவிலான இரைபிடிப் பறவை மதிப்பீடு
January 24 , 2026 181 days 250 0
தமிழ்நாடு அதன் முதல் மாநில அளவிலான இரைபிடிப் பறவை மதிப்பீட்டை ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01, 2026 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) தமிழ்நாடு இரைபிடிப் பறவை ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்னெடுப்பின் கீழ் இந்த மதிப்பீடு நடத்தப்பட உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு 50க்கும் மேற்பட்ட வனப் பிரிவுகளில் பகல் நேரங்களில் செயல் படும் மற்றும் இரவு வாழ் இரைபிடிப் பறவைகளை உள்ளடக்கியது.
தமிழ்நாடு அக்ஸிபிட்ரிஃபார்ம்ஸ், ஃபால்கோனிஃபார்ம்ஸ் மற்றும் ஸ்ட்ரிஜிஃபார்ம்ஸ் வரிசைகளைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட இரைபிடிப் பறவை இனங்களை கொண்டு உள்ளது.
இந்த மதிப்பீடு இரைபிடிப் பறவைகளின் பரவலைப் படிப்பது, அவற்றிற்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிவது மற்றும் எதிர்கால வளங்காப்புத் திட்டமிடலை ஆதரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.