TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புகளின் நிறுவல்

November 11 , 2025 7 days 94 0
  • தமிழ்நாட்டில் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புகள் நிறுவப்படுவது குறைவாகவே உள்ளது.
  • வருடாந்திர மின்சாரத் தேவையில் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தியின் பரவல் தமிழ்நாட்டில் 1.55%, கேரளாவில் 8.07% மற்றும் குஜராத்தில் 6.43% ஆக உள்ளது.
  • நிறுவப்பட்ட மொத்த மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் திறன் தமிழ்நாட்டில் 1.13GW, கேரளாவில் 1.44GW மற்றும் குஜராத்தில் 5.84GW ஆகும்.
  • பிரதமர் சூர்யா கர் மற்றும் கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகாபியான் (KUSUM-C) போன்ற தேசிய அளவிலான திட்டங்கள் வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கு 60% வரை மானியங்கள் மற்றும் சலுகைக் கடன்களை வழங்குகின்றன.
  • 1kW அளவிலான திறன் கொண்ட மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பிற்கு, இந்த அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 5 அலகு மின்சாரம் என்ற கணக்கில் சராசரியாக மாதத்திற்கு 150 அலகுகள் உற்பத்தி செய்ய முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்