கடந்த 10 ஆண்டுகளில் (2015–2025) தமிழ்நாட்டில் வனவிலங்குத் தாக்குதல்களால் 685 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தரவுகளை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் காட்டு யானைகளால் (522) ஏற்பட்டன என்ற நிலையில்அதைத் தொடர்ந்து காட்டெருமை, காட்டுப்பன்றி, மான் மற்றும் கரடி ஆகியவற்றால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
யானைத் தாக்குதல்களால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்புகள் 2019 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன (62 உயிரிழப்புகள்).
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் சில மாவட்டங்களில் இந்த மோதல் தீவிரமாக உள்ளது.
வாழ்விட இழப்பு, உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை, மற்றும் மனித குடியிருப்புகளின் விரிவாக்கம் ஆகியவை இந்த மோதலுக்கான முக்கிய காரணங்களாகும்.